நேசிக்கிறேன்

எல்லா பதிவுகள்

இருதயம் திறந்தார்

ஆண்டவர் என் இருதயத்தைத் திறந்தார் அவரைத் துதித்து என் வாயைத் திறந்தேன்

நன்மை செய்

பலன் எதுவும் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு நாள்தோறும் நீ ஏதாவது நன்மை செய்

விழிப்போடு காத்திரு

கடந்த காலத்தைக் குறித்து சிந்தியாதே! வருங்காலத்தைக் குறித்து கவலையடையாதே! நிகழ்காலத்தில் செய்கிறவைகளை ஜெபத்துடன் செய்! வீண்பொழுது போக்காதே! கிறிஸ்துவுக்காக கூடுதல் நேரம் வேலைசெய்! சில ஆத்துமாக்களையாவது இரட்சிப்புக்குள் வழி நடத்து! கர்த்தருடைய வருகைக்காக விழிப்போடு காத்திரு!

பொறுமை

பொறுமை உள்ள மனிதன் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறுவான்

தேவனுடைய வேலை

தேவனுடைய வேலையை செய்து முடிப்பதே உங்கள் முதல் கவலையாய் இருக்கட்டும் உங்கள் கவலையை தீர்த்து வைப்பதே தேவனுடைய முதல் வேலையாய் இருக்கும்

வேதம் வித்து

நாம அதிகமா வேதம் வாசிக்கிறத பற்றி சாத்தான் ஒருபோதும் கவலை பட போறது இல்ல வாசித்ததை வாழ்க்கையில் விதைக்காத வரை வேதம் வித்து மாதிரி நாம தான் எடுத்து விதைக்கணும் விளைய வைக்குறது வித்தகன் (ஆண்டவர்)

சாத்தானும் தேவனும்

சாத்தான் சிறந்ததைத் தருவதாக வாக்கு கொடுப்பான் ஆனால் மோசமானதைத் தருவான் பெருமை தருவதாகச் சொல்லி சிறுமை தருவான் லாபம் தருவதாகச் சொல்லி நஷ்டம் தருவான் மகிழ்ச்சி தருவதாகச் சொல்லி வேதனை தருவான் ஜீவன் தருவதாகச் சொல்லி மரணம் தருவான் தேவனோ என்ன சொன்னாரோ அதை அப்படியே தருவார் ஏனெனில் அவருடைய வாக்குகளெல்லாம் உண்மையானவைகள்

பெரிய தப்பிதம்

ஒருவனுடைய ஜீவியத்தில் ஏற்படுகிற பெரிய தப்பிதம் அவன் வழிவிலகி நடக்கும்பொழுது அதைப்பற்றி உணர்ச்சியற்றிருப்பது.

ஜெபமும் வேத வாசிப்பும்

ஜெபம் – மனிதர்கள் தேவனிடம் பேசும் ஊடகம் வேத வாசிப்பு – தேவன் மனிதர்களிடம் பேசும் ஊடகம்

நற்செய்தி அறிவித்தல்

இந்தியாவுக்கு சுவிசேஷகனா ஜெர்மனியிலிருந்து வந்த சீன் பால்க்க என்பவரை ஜெர்மன் தேசத்து அரசன் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தபோது, அவருக்கு 23 வயது. அவர் தரங்கம்பாடி என்ற இடத்தில் வந்து இறங்கினபோது, அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அற்பமா எண்ணினார்கள். அவருடைய இருதயம் மிகவும் பெலவீனப்பட்டுப் போயிருந்தது. அவருடைய சுய சரித்திரத்தை வாசித்துப்பாருங்கள்! ஒரு நாளில், ஒரு மனிதனுக்காவது நற்சேதியை அறிவிக்காமல், என் வாழ்க்கையை கழித்ததேயில்லை என்று குறிப்பிடுகிறார்.

வாழ்கையை கட்டுவீர்!

முதலாளி ஒருவரிடம் ஒரு வயதான தச்சர் (கார்பெண்டர்) ஒருவர் வேலை செய்து வந்தார். அந்த கார்பெண்டர் மிகுந்த திறமைசாலி. எந்த வேலை கொடுத்தாலும் மிகுந்த பொறுப்புடனும், மிக நேர்த்தியாகவும் செய்து கொடுப்பவர். ஆகவே, முதலாளிக்கு அந்த கார்பெண்டர் மீது தனி மரியாதையை இருந்து வந்தது. வயது முதிர்ந்த அந்த கார்பெண்டர் தன் வேலையிலிருந்து ஒய்வு பெற விரும்பினார். அவர் தன் முதலாளியிடம் சென்று தன் விருப்பத்தை கூறினபோது மிகுந்த வருத்தமடைந்தார் முதலாளி. பின் அக்கார்பென்டரை அழைத்து தனக்கு கடைசியாக ஒரு அழகிய மரவீடு ஒன்றை கட்டி தந்து விடும்படி கேட்டுக்கொண்டார். முதலாளியின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்ல விரும்பாத அக்கார்பெண்டர் சரியென்று ஒப்பு கொண்டார். ஆனாலும் இந்த வேலையை செய்வதால் தனக்கு பெரிதாக ஒரு லாபமும் கிடைக்கப்போவது இல்லை என்பதை அறிந்த கார்பெண்டர் மிகுந்த கவனக்குறைவுடனேயே அவ்வேலையில் ஈடுபட்டு வந்தார். ஏனோ தானோவென்று கட்டி வந்தாலும் அவ்வீடு ஒரு நாள் நிறைவடைந்தது. வீட்டை பார்த்து மகிழ்ச்சி அடைந்த முதலாளி, "இந்த வீடு உங்களுக்காக கட்டப்பட்டது" இதை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று வீட்டின் சாவியை கொண்டு வந்து கொடுத்தார். அந்தக் கார்பெண்டர் தனக்குத் தான் அந்த வீடு என்பதை அறிந்து இருந்தாரானால் தன் திறமை முழுவதையும் உபயோகித்து சிறந்த ஒரு வீட்டை உருவாக்கி இருப்பார். முதலாளிக்கு தானே என்று அவர் அலட்சியமாக கட்டின வீட்டில் இன்று இவரே குடியேற வேண்டியதாகிப் போனது. அது போல தான் நம் வாழ்வில் இன்று நாம் எடுக்கும் தீர்மானங்கள், நாம் செய்யும் செயல் எல்லாமும் தன் நாளை நாம் குடியேரப்போகும் நம்முடைய வாழ்க்கையாகிய வீட்டை கட்டப் போகின்றன என்பதை உணர்ந்து செயல் படுவோம்.

காண்பதே விசுவாசிப்பது

காண்பதே விசுவாசிப்பது என்று மனிதன் கூறுகிறான். விசுவாசிப்பதே காண்பது என்று தேவன் கூறுகிறார்.

நீயே தான் ...

இருள் ஒளியை மறைத்து விடுவதில்லை - மாறாக இன்னும் பிரகாசமாக காட்டும். தோல்விகள் மனிதனை தோற்கடிப்பது இல்லை - மாறாக வெற்றி அடையவே வழி காட்டுகின்றன. தோல்வியை சந்திக்காத எவனும் வெற்றி பெற்றவன் அல்ல தோல்வி அடைந்தும் சோர்வடையாதவனே வெற்றி பெற்றவன் அல்லது தோல்வியை சந்திக்காத எவனும் தோல்வி பெறாதவன் அல்ல தோல்வி அடைந்தும் சோர்வடையாதவனே தோல்வி பெறாதவன் சில வேளைகளில் மனிதர்கள் படிக்கும் வேதாகமம் ...."நீயே தான்"

அன்பு காட்டுவோம்

ஒரு ஊரில் நல்ல வசதி படைத்த ஒரு மனிதன் வாழ்ந்து வந்தார். அவர் தினந்தோறும் ஒரு மலை அடிவாரம் வழியாக தன் வேலை ஸ்தலத்திற்கு செல்வது வழக்கம். அவ்வழி முழுவதும் பசுமையான புற்கள் நிறைந்து மிக அழகாக கட்சி அளிக்கும். அவர் தினந்தோறும் அவ்வாறு நடந்து செல்கையில் ஒரு சிறுவன் அப்புல் வெளிகளில் தன் ஆடுகளை மேய்த்து கொண்டு இருப்பதை கவனிப்பார். அந்த சிறுவன் ஆடுகளை மேய்த்தபடி இயற்கையை ரசித்து கொண்டு இருப்பான். இவருக்கும் இயற்க்கை கட்சிகளை ரசிப்பது மிகவும் பிடிக்கும் எனினும் ஒரு நாளும் அவர் அச்சிறுவனிடம் பேசியதோ அல்லது அச்சிறுவனை பார்த்து சிரித்ததோ கிடையாது. ஒரு நாள் திடீரென்று அச்சிறுவன் தற்கொலை செய்து இறந்து போனான் என்பதை அறிந்தார் அம்மனிதர். மிகுந்த அதிர்ச்சி அடைந்த அவர் அச்சிறுவனின் இறபிற்கான காரணத்தை தெரிந்து கொள்ள அவன் வீட்டிற்கு சென்றார். அங்கே இருந்தவர்களிடம் அந்த சிறுவன் இறந்து போனதற்கு கரணம் என்னவென்று கேட்டார். அதற்கு அங்கிருந்தவர்கள் அந்த சிறுவனுக்கு அன்பு காட்ட ஒருவரும் இல்லை அதனால் தான் அச்சிறுவன் இறந்து போனான் என்று கூறினார்கள். அப்பொழுது தான் அம்மனிதர் தன் தவறை உணர்ந்தார். தினமும் அச்சிறுவனை சந்தித்த நான் அச்சிறுவனை அன்பாக விசாரித்திருந்தால் அச்சிறுவன் மறித்து போய் இருக்க மாட்டான் என்று எண்ணி மிகுந்த வேதனை அடைந்தார். ஆகவே நம்மால் முடிந்தவரை யாவரிடமும் அன்பு காட்டுவோம்.

வார்த்தையே நம்முடைய வாழ்க்கை

ஒரு ஊருல ஒரு குருடன் தர்மம் எடுத்து வாழ்ந்து வந்தார். எப்போதும் அவர் தர்மம் எடுக்கும்போது அருகில் "நான் ஒரு குருடன் எனக்கு உதவி செய்யுங்கள்" என்ற ஒரு பலகை வைதிருப்பார். அந்த வழியாக செல்லுவோர் அவருக்கு தர்மம் கொடுப்பார்கள். ஒரு நாள் அவ்வழியே வந்த ஒருவர் அந்த பலகை எடுத்து பழைய வாக்கியத்தை அழித்து விட்டு புதியதாக சில வரிகள் எழுதி வைத்து விட்டு சென்றார். பின்பு அந்த வழியாக சென்றோர் அவருக்கு அதிகமாக தர்மம் கொடுத்தததா்கள். ஒரு நாள் அவ்வழியே சென்ற ஒருவரை அந்த குருடர் இதில் என்ன வரிகள் எழுதி உள்ளது என்று கேட்டார் "இன்று ஒரு அழகான நாள் ஆனால் என்னால் பார்க்க முடியாது" என்று கூறி சென்றார். வார்த்தை நம்முடைய வாழ்க்கையை மாற்றுகிறது. வார்த்தை நம்முடைய உலகத்தை மாற்றுகிறது.

நம்பிக்கை

ஒரு இளைஞன் ஒருவன் ஒரு பெரிய மலை மீது நின்றுக்கொண்டு ஆண்டவரின் படைப்புகளை பார்த்து தேவனை துதித்துக் கொண்டு இருந்தான். அப்பொழுது அந்த மலை உடைந்து விழுந்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். அவன் எதிர் திசையில் ஓடி மலையின் மற்றொரு முனையை அடைந்த போது மற்றுமொரு அதிர்ச்சி அவனுக்கு காத்திருந்தது, அவனுக்கு முன்பாக இருந்தது அகல பாதளம். சற்றும் எதிப்பாரத சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட அந்த இளைஞன் கடவுளே என்னை காப்பாற்றும் என சத்தமிட தொடங்கினான். திடீரென வானத்திலிருந்து "கீழே குதி" என்ற ஒரு சத்தத்தை கேட்டான் அந்த இளைஞன். அது கடவுளின் குரல் என்று நிச்சயமாக நம்பினான். கீழே குதித்தால் இறப்பு நிச்சயம் என்றாலும் கடவுளை நம்பி கீழே குதித்தான். மலையிலிருந்து கீழே இறங்க உதவும் படிக்கட்டுகள் மிக அருகில் இருந்ததால் காயம் கூட எதுவும் படவில்லை. கர்த்தரை நம்பினோர் கைவிடப்படுவதில்லை.

எங்கு சென்றாலும் சந்தோஷமே

ஒரு வயதான தாயார் ஒரு சமயம் கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது, பெரும் புயல் ஒன்று கப்பலை தாக்கிற்று. அப்போதும் அந்த தாயார் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாடலை பாடிக்கொண்டு இருந்தார்கள். ஒருவர் ஓடி வந்து அந்த தாயாரிடம் அம்மா உங்களால் மட்டும் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்க முடிகிறது என்று கேட்டார். அப்போது அந்த தாயார் கப்பல் பத்திரமாக கரைக்கு சென்றால் நான் என்னுடைய சின்ன மகள் வீட்டுக்கு சென்று சந்தோஷமாக என் பொழுதை கழிப்பேன். இல்லையென்றல் என் பெரிய மகள் வீட்டிற்க்கு சென்று மிகுந்த மகிழ்ச்சியுடம் இருப்பேன் ஏனென்றல் என் பெரிய மகள் எனக்கு முன்பாகவே இயேசுவை காண சென்று விட்டால் ஆகவே நானும் சென்று மகிழுவேன் என் நேசருடன்.

எண்ணுங்கள்

கஷ்டங்களை விட ஆசீர்வாதங்களை எண்ணுங்கள் நஷ்டங்களை விட லாபங்களை எண்ணுங்கள் காயங்களை விட சந்தோஷங்களை எண்ணுங்கள் எதிரிகளை விட நண்பர்களை எண்ணுங்கள் கண்ணீரை விட புன்னகைகளை எண்ணுங்கள் ஏமாற்றுபவர்களை விட விசுவாசம் உள்ளவர்களை எண்ணுங்கள் கோபம் கொள்பவர்களை விட நற்குணம் கொண்டவர்களை எண்ணுங்கள் இவை எல்லாவற்றின் மேலும் ஆண்டவர் உங்களுக்கு செய்தவைகளை எண்ணுங்கள்

அளவில்லா ஆண்டவரின் அன்பு

நான் யேசுவிடம் சென்று என மீது "எவ்வளவு" அன்பு வைத்துள்ளீர் என கேட்டேன்; தன் இரு கரங்களையும் விரித்த அவர் "இவ்வளளவு" என கூறி தன் ஜீவனை எனக்காக கொடுத்தார். அவரின் அன்பிற்கு ஆழம், அகலம் எதுவும் உண்டோ!

பகிர்ந்துகொள்

நான் எத்தனை பேரிடம் இயேசுவை பற்றி கூறியிருக்கிறேன். ஆனால் என் சொந்த தம்பி தங்கைக்கும் சொல்லவில்லையா? இயேசுவை அறிந்து கொண்டதால் மகிழ்ச்சியாயிரு. உனக்கு மிகவும் நெருங்கியவர்களுடன் இதை பகிர்ந்துகொள்.

என் எதிரிகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.....

என் எதிரிகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்..... ஏனென்றால், என் நண்பர்கள் பொய்யாய் புகழும் போது உண்மையை கூறுகிறார்கள் என்னைப் பற்றிய நல்ல விஷயங்களை பரப்புபவர்களை தடுக்கிறார்கள் என்னில் பிடித்த காரியங்களை அல்ல பிடிக்கதவைகளை கூறுகிறார்கள் என்னைப் பற்றிய பொய்யான கருத்துகளை அகற்றி உண்மை நிலையை அறிய செய்கிறார்கள் என் குறைகளை கண்டறிவதற்காக என் பாடல் பிடிக்கவில்லை என்றாலும் கேட்கிறார்கள்

தேடுங்கள் கண்டடைவீர்கள்

வாழ்க்கையைத்தேடு நம்பிக்கையோடு உழைப்பைத்தேடு உறுதியோடு திறமையைத்தேடு முயற்சியோடு பொருமையைத்தேடு ஆர்வத்தோடு அன்பைத்தேடு அரவணைப்போடு இயேசுவைத்தேடு நல் இதயத்தோடு.

தேவனிடம் பேசு

தேவன் ஏனோக்கின் நண்பன் ஏனோக்கிடம் பேச தேவன் வருவார் தேவனிடம் பேசி சந்தோஷமாக வீட்டிற்கு துள்ளி வருவான் தேவனிடம் பேசுவதால் - அவனுக்கு துன்பமில்லை துக்கமில்லை தேவனிடம் பேசியதை வீட்டில் சொல்லி சந்தோஷமாக மகிழ்ந்திருப்பான் நீயும் நானும் தேவனிடம் பேசி சந்தோஷமாக மகிழ்ந்திருப்போம் ஒரு நாள் ஏனோக்கு தேவனிடம் பேசிகொண்டே பரலோகம் சென்று விட்டான்.

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்

நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். - (1 சாமுவ

articles2012-08-26

ஐந்து விரல் ஜெபம்

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும். - (லூக்கா 18:1ன் முதல் பகுதி) நாம் அனைவரும் ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் எப்படி ஜெபிப்பது என்று ஒரு சிலருக்கு தெரிவதில்லை. சோர்ந்து போகா

articles2012-08-26

பெற்றோரின் ஆசீர்வாதம்

உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே. - (நீதிமொழிகள். 23:22). ஒரு வயதான மனிதர் தன் மகன், மருமகள் மற்றும் நான்கு வயது பேரனோடு தன் மனைவி மரித்துப்பின

articles2012-08-26

வழுவாத விசுவாசம்

என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். - (மத்தேயு 11:6) சார்லஸ் டெம்பிள் டான் என்ற பெயரை கேட்டவுடன் யாரேனும் உங்களுடைய ஞாபகத்திற்கு வருகிறார்களா, அதற்கு வாய்ப்பில்லை. ஆனால்

articles2012-08-26

யார் பிரிக்க முடியும் நாதா

பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே'. - (எண்ணாகமம் 31:1

articles2012-08-26

வேதனைகளை அறிந்த தேவன்

நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்' - (யோபு 23:10) ஒரு ராஜா தனது குடிமக்களின் மனநிலையை அறிந்து கொள்ளும்படி, ஆள நடமாட்டம் இல்லாத ஒரு இராத்திரி வேளையிலே,

articles2012-08-26

பேதைகளை ஞானியாக்கும் வேதம்

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. - (சங்கீதம் 19:7) செடி கொடிகளும் பூக்களும் நிறைந்திருந்த அ

articles2012-08-26